தமிழகத்தில் மீண்டும் ஆயிரத்தை நெருங்குகிறது ஒருநாள் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில், கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்து, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 945 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்து, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 945 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 576 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 8 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரிலும் கொரோனா பரவல் சற்று அதிகரிக்கும் நிலையில், புதிதாக 395 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில்107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
17 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு பதிவான நிலையில், பெரம்பலூரில் புதிதாக பெருந்தொற்று பாதிப்பில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments