முதலமைச்சர், அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் தொடரப்பட்ட 2 வழக்குகளில், மு.க.ஸ்டாலினுக்கு சம்மன்

0 1643
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி பற்றிய மக்களின் மனநிலை குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும் அவர்களது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் ஸ்டாலின் கருத்து தெரிவித்ததாக கூறி, இரு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த வழக்குகளில் திமுக தலைவர் ஸ்டாலின் ஏப்ரல் 16ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments