70 மாவட்டங்களில் 15 நாட்களில் கொரோனா பரவல் 150 சதவீதம் உயர்வு - மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன்

0 3021
நாட்டின் 16 மாநிலங்களில் உள்ள 70 மாவட்டங்களில் கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்று பரவல் 150 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 16 மாநிலங்களில் உள்ள 70 மாவட்டங்களில் கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்று பரவல் 150 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்தாலும், உயிரிழப்பு விகிதம் 2 சதவீதத்திற்கு குறைவாகவே இருப்பதாக குறிப்பிட்டார்.

தற்போது கொரோனா பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரில் 60 சதவீதம் பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.

கொரோனா தடுப்பூசிகளில் 6.5 சதவீதம் வீணாகி இருப்பதாகவும், அதனை பெருமளவு குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளை வலியுறுத்தி இருப்பதாகவும் ராஜேஷ்பூசன் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments