மோட்டார் பம்புடன் களமிறங்கிய சுயேட்சை..!

0 1559
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கையில் மோட்டார் பம்பு மற்றும் கிரைண்டருடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுதாக்கல் செய்தார்

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கையில் மோட்டார் பம்பு மற்றும் கிரைண்டருடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுதாக்கல் செய்தார்.

வழக்கமாக தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்கப்பட்டுவிட்டால் அந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக கையோடு எடுத்துச்செல்வது வழக்கம்..!

ஆனால் இன்னும் சின்னமே ஒதுக்கப்படாத நிலையில் சிங்காநல்லூர் சுயேட்சை வேட்பாளர் கோப்மா மணிராஜ் என்பவர் கையில் மோட்டார் பம்புடனும், ஆதரவாளர்கள் கையில் கிரைண்டர், பழுது பார்ப்பு சாதனங்களை ஏந்திய படி வேட்பு மனு தாக்கலுக்கு புறப்பட்டார்.

இவற்றில் வேட்பாளரின் சின்னம் எது என்று பார்ப்போருக்கு சற்று குழப்பம் ஏற்பட்டது. சின்னம் ஒதுக்குவதற்குள் ஏன் பல்வேறு மோட்டார் பொருட்களுடன் செல்கிறீர்கள் ?என்று கேட்டதற்கு, கோவையில் ஜி.எஸ்.டி மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் தொழில்துறை நலிவடைந்துள்ளது எனவும் தனக்கு வாழ்வழித்த மோட்டார் தொழிலை மீட்டெடுக்கவே இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளதாகவும், எனவே அந்த பொருட்களை கையில் ஏந்திச்செல்வதாக மணிராஜ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments