ஒரே தொகுதிக்கு 2 காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் ; நிர்வாகிகள் குழப்பம்

0 5982
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்படாத காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், வேட்பாளர் எனக் கூறி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்படாத காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், வேட்பாளர் எனக் கூறி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நீதிராஜன், தனது ஆதரவாளர்களுடன் சென்று தான் தான் காங்கிரஸ் வேட்பாளர் என்று கூறி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் அந்தந்த கட்சி சார்பில் அளிக்கப்படும் படிவம் எ என்ற பிரமாண பத்திரத்தையும் சமர்பிக்க வேண்டும்.

இந்த நிலையில், நீதிராஜன் அந்த படிவம் இல்லாமலேயே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து கூறிய அவர், விரைவில் கட்சி சார்பில் அளிக்கப்படும் படிவத்தை சமர்பிப்பேன் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments