கோவை - அவினாசி சாலையில் ரூ.1,600 கோடி செலவில் மேம்பாலம்; கட்டுமான பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

0 1742
கோவை - அவினாசி சாலையில் 10 புள்ளி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1,600 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் மேம்பால கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை - அவினாசி சாலையில் 10 புள்ளி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1,600 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் மேம்பால கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், எந்த சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் மேம்பாலம் கட்டுமான பணி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சத்தியநாராயணன் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வு, மேம்பால கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு, கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments