ஜெயலலிதா எப்படி இறந்தார் ? கேள்வி எழுப்பிய உதயநிதிக்கு ஷாக்

0 31623
அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி, கூட்டத்தினரை நோக்கி ஜெயலலிதா எப்படி இறந்தார் தெரியுமா ? என்று கேள்வி எழுப்பிய நிலையில், தொண்டர் தெரிவித்த பதிலால் அதிர்ச்சி அடைந்தார்.

அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி, கூட்டத்தினரை நோக்கி ஜெயலலிதா எப்படி இறந்தார் தெரியுமா ? என்று கேள்வி எழுப்பிய நிலையில், தொண்டர் தெரிவித்த பதிலால் அதிர்ச்சி அடைந்தார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வேனில் நின்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.

அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட உதய நிதி மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். புதிய கல்வி கொள்கையால் 3 ஆம் வகுப்புக்கும், 5 ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு கொண்டு வந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்

கூட்டத்தினரை நோக்கி ஜெயலலிதா எப்படி இறந்தார் தெரியுமா ? என்று உதயநிதி கேள்வி எழுப்பினார். கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் புட் பாய்சன் என்று பதில் அளிக்க , அதிர்ச்சிஅடைந்த உதயநிதி, சுதாரித்துக் கொண்டு, உனக்கென்னப்பா நீ சொல்லிட்டு போயிருவே, என் மேல தான் வழக்கு போடுவானுங்க என்றும் இதுவரை தன் மீது 22 கேஸ் போட்டிருப்பதாக வேடிக்கையாக தெரிவித்தார்.

பிரசாரத்தின் போது உதயநிதியிடம் பெண் குழந்தை ஒன்று கொடுக்கப்பட்டது. அவருடன் இருந்த வேட்பாளர் நந்தகுமார் அந்த குழந்தையை தூக்க முயன்ற போது, செல்ல மறுத்து உதயநிதி கரங்களில் ஒய்யாரமாக் அமர்ந்து கொண்டது.

பின்னர் சிறிது நேரம் கழித்து கூட்டத்தில் இருந்த தனது தாயை பார்த்ததும் அவரிடம் சென்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments