கொரோனா 2ஆவது அலையை தடுத்தே ஆக வேண்டும்-முதலமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

0 3769
நாட்டின் கொரோனா 2ஆவது அலையை நாம் அனைவரும் இணைந்து தடுத்திட வேண்டும்

நாட்டில், கொரோனா 2ஆவது அலையை, அனைவரும் இணைந்து தடுத்திட வேண்டும் என, முதலமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் சுமார் 70 மாவட்டங்களில் குறிப்பிட்டத்தக்க அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனாவின் 2ஆவது அலையைத் தடுக்க, நோய் தடுப்பு நடவடிக்கைகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், முதலமைச்சர்களை பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரிய நகரங்களில் மட்டும் அல்லாது சிறிய நகரங்களிலும், ஊரக பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை அவசர அவசியம் என்றார். மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது, நல்லாட்சிக்கான சோதனையாகவே தாம் கருதுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments