தமிழகத்தில் பாஜக போட்டியிடும் மேலும் 3 வேட்பாளர்கள் அறிவிப்பு

தளி, உதகமண்டலம், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தேசியப் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ளார்.
தளி, உதகமண்டலம், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தேசியப் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும், 20 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
மார்ச் 14 ஆம் நாள் 17 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்தது. இந்நிலையில் எஞ்சிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தளி தொகுதியில் நாகேஷ் குமாரும், உதகமண்டலத்தில் போஜராஜனும், விளவங்கோட்டில் ஜெயசீலனும் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments