இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் கயவர்களை ஒழிப்பதே எனது முதல் பணி - கமல்ஹாசன்

0 1350
கோவையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமுள்ளதாகவும், இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் கயவர்களை ஒழிப்பதே தனது முதல் பணி என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

கோவையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமுள்ளதாகவும், இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் கயவர்களை ஒழிப்பதே தனது முதல் பணி என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

கோவை தெற்குச் சட்டமன்றத் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு தரப்பினரிடம் தொடர்ச்சியாக உரையாடியதில் கோவையில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிக அளவில் இருப்பதை அறிந்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் கயவர்களை ஒழிப்பதே தன் முதல் பணி எனச் சூளுரைத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments