தமிழக தேர்தல்: பரோட்டா போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

0 2423
தமிழக தேர்தல்: பரோட்டா போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

சென்னை வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அசோக், பரோட்டா கடையில் பரோட்டா போட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கடந்த 4 நாட்களாக வேளச்சேரிக்கு உட்பட்ட தொகுதிகளில் வீடுவீடாக வாக்கு சேகரித்த அசோக், இன்று தரமணி பகுதியிலுள்ள பெரியார் நகரில் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த பரோட்டா கடையில் பரோட்டா போட்டு கடை ஊழியர்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் அனைவருக்கும் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரச்சாரங்களை விநியோகித்த அசோக்கின் ஆதரவாளர்கள், கொரோனாவை ஒழித்த சின்னம் இரட்டை இலை என முழக்கங்களை எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments