இண்டிகோ விமானத்தில் நடுவானில் பிறந்த அழகான குழந்தை..!

0 1241
இண்டிகோ விமானத்தில் நடுவானில் பிறந்த அழகான குழந்தை..!

பெங்களூருவில் இருந்து ஜெய்ப்பூருக்கு சென்ற இண்டிகோ விமானத்தில், நடுவானில், பெண் ஒருவருக்கு அழகான குழந்தை பிறந்தது.

விமானம் பறக்கத்துவங்கிய சிறிது நேரத்தில் அந்த பயணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த பெண் மருத்துவர் சுபஹானா நஸீர் உதவியுடன், விமான பெண் ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர்.

இதனிடையே ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு தகவலும் அளிக்கப்பட்டு மருத்துவ குழுவினர் ஆம்புலன்சுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

தாயும் சேயும்நலமாக இருக்கும் நிலையில், ஜெய்ப்பூர் வந்த மருத்துவர் சுபஹானாவுக்கு இண்டிகோ நிறுவனம் நன்றி தெரிவிக்கும் வாழ்த்து அட்டையை வழங்கி கவுரவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments