அதிமுக மற்றும் திமுகவை வீழ்த்தவே தேமுதிகவுடன் கூட்டணி - டிடிவி

0 2674
அதிமுக மற்றும் திமுகவை வீழ்த்தவே தேமுதிகவுடன் கூட்டணி - டிடிவி

அதிமுக, திமுகவை வீழ்த்தவே தேமுதிகவுடன் கூட்டணி அமைத்ததாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் அமமுக தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில், கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்தை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீய சக்தி, துரோக சக்தியை தேர்தலில் வீழ்த்தவே தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்ததாக தெரிவித்தார்.

அமமுக - தேமுதிக கூட்டணி தலைமையால் அமைக்கப்பட்டது என்பதை விட தொண்டர்களால் உருவானது எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments