தேர்தல் காலத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பீகார் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு ஆலோசனை

0 1576
தேர்தல் காலத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பீகார் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு ஆலோசனை

மிழகத்தில் தேர்தல் காலத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பீகார் மாநில அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு ஆலோசனை நடத்தியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழகத்திலும் தேர்தல் காலத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க பீகார் மாநிலத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் சுதிர்குமார், ரோகிணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் தேர்தலைப் பின்பற்றித் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக அவர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு ஆலோசனை நடத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments