சீரம் நிறுவனத்திடம் மேலும் 10 கோடி கொரோனா தடுப்பு மருந்து வாங்கும் மத்திய அரசு

புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.
புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.
இந்தியாவில் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் கொரோனா தடுப்பு மருந்துகளை அரசு கொள்முதல் செய்து, தடுப்பூசி இயக்கத்தை நடத்தி வருகிறது.
நேற்றுவரை மூன்றரைக்கோடிக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஒருமுறை செலுத்தும் மருந்து 157 ரூபாய் ஐம்பது காசுகள் என்னும் விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments