மும்பை காவல்துறை உதவி ஆய்வாளர் சச்சின் வாஸேயின் கருப்பு நிற மெர்சிடஸ் காரை கைப்பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

0 935
மும்பை காவல்துறை உதவி ஆய்வாளர் சச்சின் வாஸேயின் கருப்பு நிற மெர்சிடஸ் காரை கைப்பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான ஸ்கார்ப்பியோ காரின் உண்மையான நம்பர் பிளேட், 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் , பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவை மும்பை காவல்துறை உதவி ஆய்வாளர் சச்சின் வாஸேயின் கருப்பு நிற மெர்சிடிசிஸ் காருக்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எரிந்த நிலையில் ஒரு வெள்ளை குர்தாவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காரை தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மும்பை போலீசாரின் குற்ற உளவுப் பிரிவு அலுவலகம் மற்றும் சச்சின் வாஸேயின் வீடு உள்ளவற்றில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனையிட்டனர்.

தமது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை சச்சின் வாஸே அழித்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாஸேயின் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் சில முக்கிய மின்னணு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் அம்பானி இல்லம் அருகே காரைவிட்டுச் சென்ற மர்ம நபர் சச்சின் வாஸேதான் என்றும் அவர் அணிந்திருந்த குர்தாதான் பின்னர் எரிந்த நிலையில் மெர்சிடிஸ் காருக்குள் கிடைத்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments