காரில் இருந்து தவறி விழுந்த சிறு குழந்தை உயிர் பிழைத்த காட்சி... வெளியான சிசிடிவி காட்சி

0 3105
காரில் இருந்து தவறி விழுந்த சிறு குழந்தை உயிர் பிழைத்த காட்சி... வெளியான சிசிடிவி காட்சி

சாலையில் ஓடுகிற காரில் இருந்து சிறு குழந்தை ஒன்று தவறி விழுந்தது. சுற்றிலும் பரபரப்பாக வாகனங்கள் வேகமாக பாய்ந்து வந்த நிலையில் மிரண்டு நின்ற குழந்தை தன்னை சாலையில் தவறவிட்ட தாயைத் தேடி அந்தக் காரை பின்தொடர்ந்து ஓடியது .

இதற்குள் காரில் இருந்து குழந்தை தவறிவிழுந்ததை கவனித்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அப்படியே நிறுத்தினர். சாலையின் நடுவே நடந்து சென்ற குழந்தையை, இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பிடித்துக் கொள்ள, குழந்தை கீழே விழுந்ததைக் கண்டு பதறிய தாய் ஓடிவந்து தூக்கிச் சென்றார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சியை ஷிரின்கான் என்பவர் டிவிட்டரில் பதிவிட்டார். இதனை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments