ஸ்ரீராமர் பிரான் நடந்த தடங்களுக்கு ரயிலில் ஆன்மீக சுற்றுலா : சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஆன்லைனில் தொடக்கம்

0 1099
ஸ்ரீராமர் பிரான் நடந்த தடங்களுக்கு ரயிலில் ஆன்மீக சுற்றுலா : சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஆன்லைனில் தொடக்கம்

ஸ்ரீராம பாதை யாத்திரைக்கான சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு ஆன்லைன் மூலம் தொடங்கியது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து அயோத்தி வரை இந்த ரயில் வரும் 17ம் தேதி தொடங்கி 5 நாள் ஆன்மீகப் பயணம் மேற்கொள்கிறது.

நந்திகிராம், பிரயாக் ராஜ், சித்ரகூட் வழியாக உள்ள முக்கிய வைணவக் கோவில்களை இந்த ரயில் வலம் வர உள்ளது. இதற்கான கட்டணம் 4 ஆயிரத்து 725 ரூபாயாகும்.

மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணம் 5 ஆயிரத்து 775 ரூபாய். இந்த கட்டணம் மூலம் பயணிக்கு 4 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். தங்குமிடம் உணவு, போன்றவை இலவசமாக வழங்கப்படும்.

இதே போன்று ஜம்மு காஷ்மீர் பாரம்பரிய சுற்றுலாவுக்கும் ஹரிதுவார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, ஆகிய புனித நகரங்களுக்கும் சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments