கங்குலி சிக்சர் போல் மேற்கு வங்க தேர்தலில் பாஜக சிக்சர் அடித்து ஆட்சியமைக்கும் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 676
கங்குலி சிக்சர் போல் மேற்கு வங்க தேர்தலில் பாஜக சிக்சர் அடித்து ஆட்சியமைக்கும் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கிரீஸை (Crease) விட்டு வெளியில் வந்து சிக்சர் அடிப்பது போல், இந்தத் தேர்தலில் பாஜகவும் சிக்சர் அடித்து மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மிட்னாப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன் கங்குலி பாஜகவில் இணைவார் என யூகங்கள் வெளிவரும் நிலையில், மத்திய அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments