தமிழகத்தில் விறுவிறுப்படையும் தேர்தல் பிரசாரம் ! பல்வேறு கட்சியினரும் வாக்கு சேகரிப்பு

0 1808
தமிழகத்தில் விறுவிறுப்படையும் தேர்தல் பிரசாரம் ! பல்வேறு கட்சியினரும் வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. பல்வேறு கட்சியினரும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். 

திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருவதாக முன்னாள் அமைச்சர்  பா.வளர்மதி தெரிவித்தார்.  நங்கநல்லூரில் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆலந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய அவர், தற்போது நடைபெற உள்ள தேர்தல் சவாலானதாக இருக்கும் என்பதால் அதிமுகவினர்  வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் முருகன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  கமுதி, முதுகுளத்தூர்,கடலாடி, சாயல்குடி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்காளர்களை சந்தித்த அவர்  குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் ஊழியர் கூட்டம் மற்றும் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது  இதில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பரமத்தி வேலூர் தொகுதியின் வேட்பாளர் எஸ். சேகரை அறிமுகப்படுத்தி வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார்‍.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதி அதிமுக வேட்பாளர் அர்ஜுனன், வீதிவீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார்‍. எக்கியார் குப்பம், வசவன் குப்பம் உள்ளிட்ட 19 மீனவ குப்பத்தில் அவர் இரட்டை இலைச் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்‍.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடாசலம், அந்த கட்சியின் தலைவர்களின் வேடம் அணிந்தவர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி,தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின்ஆகியோரது வேடமிட்ட கலைஞர்களுடன் எம்ஜிஆர் நகர் வாரச்சந்தைக்கு வந்தவர்களிடம் உதயசூரியன்சின்னத்திற்கு ஆதரவு கோரினார். பேருந்து பயணிகளிடமும்,வெங்கடாசலம் வாக்கு சேகரித்தார்‍.

வீடு இல்லா நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச வீடு கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்து,கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் அசோக்குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .  சிக்காரிமேடு, மனியாண்டப்பள்ளி, போடரப்பள்ளி, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவர் இரட்டை இலைச் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜே. எஸ். ஆறுமுகம்,  காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு, பொன்னாடை போர்த்தி ஆதரவு திரட்டினார்‍. இத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்றும் அவர் வாக்கு சேகரித்தார்‍.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பேசி மக்களிடம் வாக்கு சேகரித்தார். பாகலூர் பகுதியில் வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டறிக்கைகளை வழங்கி அவர் அதிமுகவிற்கு ஆதரவு திரட்டினார்.

தமிழக அரசுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில், இலவசத் திட்டங்களை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரி,பூந்தமல்லி, அம்பத்தூர் மற்றும் மதுரவாயல்  ஆகிய இடங்களில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய தினகரன், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்தார். 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பன்னீர்செல்வம், கட்சி மற்றும் கூட்டணி கட்சியினருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்‍.அவரை வெற்றி பெறச் செய்வதற்கான யுக்திகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் எல்.முருகன் தேர்தல் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பின்தங்கிய பகுதியாக உள்ள தாராபுரம் வளர்சியடைய தமிழக மற்றும் மத்திய அரசுகள் நல்ல திட்டங்களை கொடுத்து கொண்டுள்ளனர் என்றார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக பாடுபட வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டுக் கொண்டார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுகவின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அவர் கூட்டணி செயல் வீர ர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் காரில் அமர்ந்து கொண்டு அப்போதைய துறை சார்ந்த அமைச்சர்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு திட்டப்பணிகளை கொண்டு வந்ததாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் பகுதியில் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக வேட்பாளர்  எஸ்.எஸ்.அன்பழகனை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். 

பேரூராட்சியாக இருக்கும் களம்பூரை  நகராட்சியாக தரம் உயர்த்துவேன் என்று போளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உறுதி அளித்தார்.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூர் பகுதியில் அவர் ஆதரவாளர்களுடன் திறந்த வேனில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையத்தில் ஏழை எளிய மக்களுக்கு 2ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அதிமுக வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார். கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையத்தில் அவர் அதிமுக மற்றும்  கூட்டணி கட்சியினருடன்  வீதிவீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

தமிழகம் உணவு உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழங்கிய இலவச மின்சாரம் தான் கீழ்பென்னாத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.பிச்சாண்டி தெரிவித்தார். கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாயுடுமங்கலம், பொற்குணம், புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவர் வீடு வீடாக சென்று கருணாநிதியின்  சாதனைகளையும், தேர்தல் அறிக்கைகளையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். 

நாகை மாவட்டம் கீழ்வேளூர்  தொகுதி மக்கள் நீதி மைய வேட்பாளர் டாக்டர் சித்து பல்வேறு பகுதிகளில் டார்ச்லைட் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.  வேளாங்கண்ணி அடுத்த காரைநகர், மூலக்கடை, தண்ணீர்பந்தல், காரப்பிடாகை, திருப்பூண்டி, மேலப்பிடாகை, உள்ளிட்ட பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவனங்களுக்கு சென்ற அவர் பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் அறிக்கையின் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைக்கும் திமுகவின் கனவு பலிக்காது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆக்கூர் முக்கூட்டில் அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் அறிமுகவிழா கூட்டம் நடைபெற்றது.

திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருவதாக முன்னாள் அமைச்சர்  பா.வளர்மதி தெரிவித்தார்.  நங்கநல்லூரில் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆலந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய அவர், தற்போது நடைபெற உள்ள தேர்தல் சவாலானதாக இருக்கும் என்பதால் அதிமுகவினர்  வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். 

நாடாளுமன்ற தேர்தலை போல் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் திமுக பிரம்மாண்ட வெற்றி பெறும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற திமுக வேட்பாளராக போட்டியிடும் அமலுவை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,  தமிழகத்திற்கு  புயல் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் 40 ஆயிரம் கோடி கோரியதாகவும் ஆனால் 1000 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியதாகவும் தெரிவித்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செந்தில்குமார்,காவலூரில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் பரப்புரையில் ஈடுபட்டார். பீமகுளம், நாயக்கனூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு திறந்தவெளி வாகனத்தில் பயணித்த அவர், ஆலங்காயம் பகுதியில் இருந்து காவலூர் செல்லும் ஒற்றை வழிமலைச்சாலை பாதுகாப்பு கருதி இருவழிசாலையாக மாற்றப்படும் என்ற வாக்குறுதியுடன் வாக்கு சேகரித்தார்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயராம் வாக்கு சேகரித்தார். சிங்காநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் எம்.எல்.ஏ.கார்த்தியும், மக்கள் நீதி மய்யம் சார்பில் மகேந்திரனும் போட்டியிடுகின்றனர். அந்த தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும், கே.ஆர்.ஜெயராம்,  தண்ணீர் பந்தல் பகுதியில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, பேருந்தில் ஏறி பயணிகளிடம் ஆதரவு திரட்டினார்.

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் திருவாலங்காடு ஒன்றியப் பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். இருபதுக்கு மேற்பட்ட ஊர்களில் திமுகவினர் கூட்டணிக் கட்சியினர் புடைசூழ வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் கேட்டுக்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட 3 இடங்களில் திமுக தேர்தல் பணிமனையை அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு திறந்து வைத்தார். அம்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் ஜோசப் சாமுவேல் போட்டியிடுகிறார். இந்நிலையில் அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம், முகப்பேர், கொரட்டூர், உள்ளிட்ட மூன்று பகுதிகளில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. 

ஆரணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன் அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக சார்பில் போட்டியிடும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனுக்கு எதிராக இத்தொகுதியில் எஸ்.எஸ்.அன்பழகன் களம் காண்கிறார். ஆரணி காமராஜர் சிலை அருகே பட்டாசு வெடித்து பிரச்சாரத்தைத் துவங்கிய அவர், அப்பகுதியில் உள்ளோருக்கு சால்வை அணிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர்களின் காலில் விழுந்தும் அன்பழகன் பரப்புரையில் ஈடுபட்டார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுகவுடனான கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் யுவராஜ் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். கருங்கல்பாளையம்,கமலா நகர்,கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவின் திட்டங்களை கூறி, யுவராஜ் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இவர் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் திருமகன் ஈவெராவை எதிர்த்து களம்காண்கிறார்.

கருர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  கோடங்கி பட்டி, பெருமாப்பட்டி, ஜல்லிபட்டி, சின்னம நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இது வரை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களை எடுத்துச் சொல்லி அமைச்சர் வாக்கு சேகரித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவிந்தசாமி நகர், டிரைவர்ஸ் காலனி உள்ளிட்ட இடங்களில் மேளதாளம் முழங்க பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு, பெண்கள் சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். மேலும் சாலையோரக் கடைகளில் சிற்றுண்டி அருந்தியும் கூழ் குடித்தும் அவர் பரப்புரையில் ஈடுபட்டார்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கணேசராஜா, பாளை ஒன்றியம், சீவலப்பேரி பகுதிகளில் அதிமுக அறிவித்துள்ள திட்டங்களை பட்டியலிட்டு,தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் செங்கல்சூளை தொழிலாளர்களுக்கு தடையின்றி சவுடு மண் கிடைக்க வழி வகை செய்யப்படும் என கூறினார். 

கடலூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கடல்தீபனை ஆதரித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மஞ்சக்குப்பம் எம்ஜிஆர் சிலை அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்து ஆட்சிக்கு வந்தால், உலகின் தலைசிறந்ததாக தமிழகத்தை மாற்றுவேன் என்று சீமான் சூளுரைத்தார். சினிமாவில் வரும் வருமானத்தை விட தனக்கு இனமானம் முக்கியம் என்பதால் தனித்து போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார். தென் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டால் தனக்கு ஜாதி முத்திரை குத்திவிடுவார்கள் என்பதால் திருவொற்றியூரில் போட்டியிடுவதாக சீமான் கூறினார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமாரை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். 

திருவண்ணாமலையில் திமுக தேர்தல் பணிக்குழு அலுவலகங்களை வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு திறந்து வைத்தார். அவருக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று வாக்குச் சேகரித்தனர். அப்போது, நகரின் பல்வேறு பகுதிகளில் திமுக தேர்தல் பணிக்குழு அலுவலகங்களை வேட்பாளர் எ.வ.வேலு திறந்து வைத்தார். தேனிமலையில் தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை திறந்து வைத்த அவருக்கு திமுக தொண்டர்கள் வெள்ளி வாள் பரிசளித்தனர்.
திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் தங்கவேல் போட்டியிடுகிறார்.

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலம் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அஸ்தம்பட்டி அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் திமுக சார்பில் போட்டியிடும் ராஜேந்திரன் மற்றும் அமமுக சார்பில் களமிறங்கும் நடராஜனை எதிர்த்து போட்டியிடுகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ். நைனா கண்ணு, பெண்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். செங்கம் சுற்றுவட்டார பகுதிகளான குயிலம், ஆலப்புதூர், புதுப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்ற அவர், அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது எம்.எஸ். நைனா கண்ணு பெண்களின் காலில் விழுந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் திமுக சார்பில் போட்டியிடும் கிரி மற்றும் தேமுதிக சார்பில் போட்டியிடும் அன்பை எதிர்த்து களம்காண்கிறார்.

விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆர்.இலட்சுமணன் அப்பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். குமளம் கிராமத்தில் பட்டாசு வெடித்து வேளதாளங்கள் முழங்க பிரச்சாரத்தைத் துவங்கிய அவருக்கு, பெண்களும் சிறுவர்களும் உற்சாக நடனமாடி வரவேற்பு அளித்தனர். மேலும் வயல்களுக்குச் சென்றும் செங்கல் சூளைப் பணியாளர்கள் மற்றும் கரும்பு வெட்டும் தொழிலாளர்களிடம் ஆதரவு கேட்டும் அவர் பரப்புரையில் ஈடுபட்டார். இதையடுத்து பஞ்சமாதேவி, புதுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே அமமுக கூட்டத்தில் ஒருவர் புலி நடனம் ஆடினார். பூந்தமல்லி தனி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து, டிடிவி தினகரன் குமணன் சாவடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக, அவரை வரவேற்க, தப்பாட்டம், மேளதாளங்கள் முழங்க இசை வாத்தியங்கள் வாசிக்கப்பட்டது. அதில், அமமுக நிர்வாகி ஒருவர் இசைக்கு ஏற்ப திடீரென புலி நடனம் ஆட ஆரம்பித்தார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜேந்திரன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் மங்களநாதனிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுகவுடனான கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் யுவராஜ் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். கருங்கல்பாளையம்,கமலா நகர்,கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவின் திட்டங்களை கூறி, யுவராஜ் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இவர் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் திருமகன் ஈவெராவை எதிர்த்து களம்காண்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செந்தில்குமார்,காவலூரில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தபின் பரப்புரையில் ஈடுபட்டார். பீமகுளம், நாயக்கனூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு திறந்தவெளி வாகனத்தில் பயணித்த அவர், ஆலங்காயம் பகுதியில் இருந்து காவலூர் செல்லும் ஒற்றை வழிமலைச்சாலை பாதுகாப்பு கருதி இருவழிசாலையாக மாற்றப்படும் என்ற வாக்குறுதியுடன் வாக்கு சேகரித்தார்.

சென்னை வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அசோக், பரோட்டா கடையில் பரோட்டா போட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடந்த 4 நாட்களாக வேளச்சேரிக்கு உட்பட்ட தொகுதிகளில் வீடுவீடாக வாக்கு சேகரித்த அசோக், இன்று தரமணி பகுதியிலுள்ள பெரியார் நகரில் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த பரோட்டா கடையில் பரோட்டா போட்டு கடை ஊழியர்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் அனைவருக்கும் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரச்சாரங்களை விநியோகித்த அசோக்கின் ஆதரவாளர்கள், கொரோனாவை ஒழித்த சின்னம் இரட்டை இலை என முழக்கங்களை எழுப்பினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ். நைனா கண்ணு, பெண்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். செங்கம் சுற்றுவட்டார பகுதிகளான குயிலம், ஆலப்புதூர், புதுப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்ற அவர், அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது எம்.எஸ். நைனா கண்ணு பெண்களின் காலில் விழுந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இவர் திமுக சார்பில் போட்டியிடும் கிரி மற்றும் தேமுதிக சார்பில் போட்டியிடும் அன்பை எதிர்த்து களம்காண்கிறார்.

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலம் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அஸ்தம்பட்டி அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இவர் திமுக சார்பில் போட்டியிடும் ராஜேந்திரன் மற்றும் அமமுக சார்பில் களமிறங்கும் நடராஜனை எதிர்த்து போட்டியிடுகிறார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். திருவாரூர் துர்காலய சாலையில் பேண்ட் வாத்தியங்கள், முழங்க திமுக கொடி மற்றும் உதயசூரியன் சின்னம் பொறித்த பதாகைகளை எந்தி ஊர்வலமாக வந்த நிலையில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் என்பவர் போட்டியிடுகிறார்.

விருதுநகர் மாவட்டத்தில் வைப்பாறு, குண்டாறு, அழகர் அணைத் திட்டங்கள் கொண்டுவரப்படும் என ராஜபாளையம் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் வெற்றிபெற்றால், ராஜபாளையத்தில் புறவழிச்சாலையும், தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாம்பழக் கூழ் தொழிற்சாலையும் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

திருத்தணி திமுக வேட்பாளர் சந்திரன் கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோவிலில் வழிபட்ட பின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். ஏராளமான திமுக நிர்வாகிகள் இரு சக்கர வாகனங்களில் பின்தொடர, திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி சந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டார். திருத்தணியில் ஜவுளி பூங்கா நிறுவப்படும் என்பன உள்ளிட்ட திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் காந்திபுரம் பகுதியில் சிறு வியாபாரிகளுடன் சாலையோரத்தில் அமர்ந்து உணவருந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவக்கிய வானதி சீனிவாசன், கெம்பட்டி காலனியில் தேர்தல் பணிமனை திறந்து வைத்தார். பின்னர், உக்கடம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் சிறு வியாபாரிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது, மாவட்ட பாஜக சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி  வழங்கப்பட்ட நிலையில், அவர்களுடன் சேர்ந்து வானதி சீனிவாசன் சாலை ஓரத்தில் அமர்ந்து சாப்பிட்டார்.

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரமேஷ் என்பவர், காந்தி வேடம் அணிந்து, வித்தியாசமான முறையில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் திருவிழாவில் சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் நூதன முறையில் வாக்கு சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனரான ரமேஷ், நாமக்கல் நகரில் கையில் கைத்தடியுடன் வீதி, வீதியாக வலம் வந்து, துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், தேநீர் கடைக்கு சென்று டீ போட்டுக்கொடுத்து  வாக்கு சேகரித்தார். விருதுநகர் செல்லும் சாலையில் திறந்தவெளி பிரச்சார வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஆர்பி உதயகுமார், கூட்டத்திலிருந்த பெண் குழந்தைக்கு விஜயலெட்சுமி என பெயர் சூட்டினார். தொடர்ந்து அருகிலுள்ள டீ கடைக்கு சென்ற அவர், நிர்வாகிகளுக்கு தானே டீ போட்டுக்கொடுத்து வாக்குச் சேகரித்தார்.   

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.டி. ராமச்சந்திரன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 2- வது முறையாக குன்னம் தொகுதியில் களம் காணும் இவர், குரும்பாபாளையம் என்ற கிராமத்தில் இருந்து தமது பிரசாரத்தை தொடங்கினார். கொட்டரை, ஆதனூர், சீராநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த வேனில் சென்று, ஆதரவு திரட்டினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவி, இன்று காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரக்கோணம் தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடும் சு. ரவி, வளர்புரம் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அரிகலாபாடி, பரமேஸ்வரமங்கலம், இலுப்பை தண்டலம், மாங்காட்டுச்சேரி, முருங்கை, கணபதிபுரம், திருமாதலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சதன் பிரபாகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வேனில் நின்றவாறு பரமக்குடி நகர பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

பரமக்குடியில் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரை எதிர்த்து திமுக சார்பில் செ.முருகேசன் போட்டியிடுகிறார்.

அதிமுக ஆட்சியின்10 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து, திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி - கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வெல்லமண்டி நடராஜன், அங்குள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து தமது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பின்னர், தாரநல்லூர்,மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி, வீதியாக வலம் வந்து, வெல்லமண்டி நடராஜன் ஆதரவு திரட்டினார்.

சென்னை திருவொற்றியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குப்பன், பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட சாத்தாங்காடு, சாத்துமா நகர், உதயசூரியன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மலர்தூவி வரவேற்பு அளித்த நிலையில், பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

அதிமுகவில் எப்போதும், ஜாதி மத பேதம் பார்ப்பது கிடையாது என அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இராசிபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் டாக்டர் வி.சரோஜா அறிமுக கூட்டம், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் தங்கமணி, அருந்ததியர்களுக்கு எம்பி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை கொடுத்து அழகு பார்த்த இயக்கம் அதிமுக என்றார். இதற்கிடையே, வேட்பாளர் அறிமுக கூட்டம் முடிவடைவதற்கு முன்பாகவே, விநியோகம் செய்யப்பட்ட பாட்டில் குளிர்பானத்தை, அங்கிருந்தவர்கள் முண்டியடித்தும், ஒருவரை, ஒருவர் தள்ளிக்கொண்டும், அவற்றைப் பறித்துச் சென்றனர். 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தூசி.கே.மோகன் 2-வது நாளாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெம்பாக்கம் அருகேவுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேர்தல் பிரச்சார துண்டுகளை வைத்து பூஜை செய்த அவர், சாமி தரிசனத்திற்கு பின் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது, செய்யாறை தலைமையிடமாக கொண்டு, தனி மாவட்டம் உருவாக்கப்படும் என உறுதியளித்து வாக்கு சேகரித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிச்சாண்டி கிராமம் கிராமமாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.

குன்னியந்தல், வள்ளிவாகை, நூக்காம்பாடி, இராந்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டதால் தான் உணவு உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளதாக தெரிவித்தார்.

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆதம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

திமுக ஆட்சிக்காலத்தில் செய்த திட்டங்களையும், தங்கள் கட்சி தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளையும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, பரப்புரை மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குமரேசனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.

மக்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் மாற்று அரசியல் வந்தால் தான் மக்களின் வாழ்க்கை தரம் மாறும் என்றார். பிரச்சாரத்தின் போது குறைவான மக்களே இருந்ததால் அங்கிருந்து 3 நிமிடத்தில் புறப்பட்டு சென்ற கமல்ஹாசன், உடுமலைப்பேட்டை பிரச்சாரத்தையும் ரத்து செய்துவிட்டு ஹெலிகாப்டரில் ஈரோட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

சென்னை விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா, ராணி அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக புதன்கிழமை காலை வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், மாலையில், நடந்து சென்று, திமுகவின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு சீட்டுகளை வழங்கி மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, தாரை தப்பட்டை முழங்க, மலர் தூவி, ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்பு அளித்தனர்.

சென்னை - மயிலாப்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஸ்ரீபிரியா, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம், காலையில் வேட்பு மனுவை சமர்பித்த அவர், மாலையில் பிரசாரத்தை தொடங்கினார்.

அன்னை சத்யா நகர், கீரின்வேஸ் சாலை, குட்டி கிராமணி தெரு உள்ளிட்ட பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த  ஸ்ரீபிரியாவுடன் பொதுமக்கள் செல்பி எடுத்தனர்.

சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கீர்த்தனா திருவான்மியூர் மார்க்கெட் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார்.

சாலையோரத்தில் பழ வியாபாரம் செய்யும் பெண்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது, தேர்தலின் போது மட்டும் வாக்கு கேட்டு வருவதாகவும், தங்கள்  பிரச்சனை குறித்து யாரும் அக்கறை கொள்வதில்லை என பெண் வியாபாரி ஒருவர் ஆதங்கப்பட்டார்.

இதனை சற்றும் எதிர்பாராத கீர்த்தனா, பதிலளிக்க திணறிய நிலையில், உடன் வந்திருந்தவர்கள் பதிலளிக்க, சுதாரித்துக்கொண்ட கீர்த்தனா,  மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக தான் தாங்கள் இந்த தேர்தலில் களம் காண்பதாக தெரிவித்தார்.

கடலூர் சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்சி சம்பத் பல்வேறு கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தாழங்குடா, குண்டு உப்பலவாடி, சுப பாலவாடி, கண்ட காடு  உள்ளிட்ட பல கிராமங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில், அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

சென்னை அண்ணா நகரில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் சட்ட மன்ற உறுப்பினர் மோகன், யார் நல்லது செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி, சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியும், வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மதியழகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜெகதேவி, மஜீத்கொள்ளஹள்ளி,  கொத்தப்பள்ளி,உள்ளிட்ட பல கிராமங்களுக்கு நடந்து சென்று, வாக்காளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

சென்னை தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோடம்பாக்கம், சாமியார் மடம் , பவர் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக கோடம்பாக்கம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ, வீதி விதீயாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரவக்குறிச்சி கேர் நகர், பாவா நகர், காமராஜ் நகர், கரடிபட்டி போன்ற நகரப்பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி வீதி வீதியாக சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

அதிமுக கூட்டணியில் சென்னை - துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

எல்லிஸ் சாலை, சத்யவாணி முத்துநகர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வினோஜ் பி. செல்வம், பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படுமென உறுதி அளித்தார். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், துறைமுகம் தொகுதியில் இருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தம்மை தேர்ந்தெடுத்து அனுப்புமாறு, வாக்காளர்களிடம் வினோஜ் பி செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதன்கிழமை காலை கோபிச்செட்டிப்பாளையம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த அவர், மாலையில் கலிங்கியம் பகுதியில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் சாலையோர வியாபாரிகளை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மதிவேந்தன் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சேலம் ரோடு, பழைய பேருந்து நிலையம் பெரியகடைவீதி, சின்ன கடை வீதி, புதிய பேருந்து நிலையம் . உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் என ஏராளமானோர் அவருடன் ஊர்வலமாக சென்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை அமைக்கப்படும் என பாஜக சார்பில் அங்கு போட்டியிடும் அண்ணாமலை தெரிவித்தார். அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய பகுதியில் திப்பம்பட்டி, மீனாட்சி வலசு, வடுகபட்டி இச்சிப்பட்டி போன்ற பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், இதனை தெரிவித்தார்.

கூட்டணி கட்சியினரை மதித்து, தேர்தல் பணியாற்றக் கூடியவர்கள் அதிமுக தொண்டர்கள் என, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியில், கோவை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் கே அர்ஜுனன் அறிமுக கூட்டம், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, 2016ஆம் ஆண்டு, அதிமுகவை நம்பி வாக்களித்த பொதுமக்களை ஏமாற்றாமல், அவர்கள் எதிர்பார்ப்பை விட கூடுதலாகவே பணியாற்றியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments