திமுக தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன்: மு.க.ஸ்டாலின்

0 1466
திமுக தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாமக்கல் - புங்கா சாலையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.  இந்த தேர்தலில் தமிழகத்தை ஆள தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அமைச்சர்களையும், அவர்களின் துறைகளையும் விமர்சித்த மு.க. ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் தனியாரிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்து விட்டு மின்மிகை மாநிலம் என்று கூறுவதாகத் தெரிவித்தார்.

திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் காப்பி எடுத்து அதிமுக வெளியிட்டதாக கூறிய ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை காமெடி வில்லன் என்றும் குறிப்பிட்டார்

நத்தம், வேடசந்தூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று பரப்புரை மேற்கொள்ளும் ஸ்டாலின், மாலை தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் மற்றும் திருப்பெரும்புதூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments