டிடிவி தினகரனை புறக்கணித்த தேமுதிகவினர்..! மரியாதை இல்லை என வேதனை

0 8091
டிடிவி தினகரனை புறக்கணித்த தேமுதிகவினர்..! மரியாதை இல்லை என வேதனை

திருவொற்றியூரில் அமமுக வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்த நிலையில், தங்களுக்கு உரிய மரியாதை தரவில்லை என ஆதங்கப்பட்ட தேமுதிகவினர் தினகரன் பிரச்சாரத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர் தொகுதி அமமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கூட்டணிகட்சியான தேமுதிகவின் பெயரை சொல்ல மறந்துவிட்டார்

இது கூட்டணிகட்சியான தங்களுக்கு மரியாதை குறைவு என்று தேமுதிகவினர் விரக்தியடைந்தனர். முறைப்படி தங்களை அழைக்கவில்லை என்றும், தாங்கள் வருகிறோம் என்று அமமுக பகுதி செயலாளரிடம் கூறிய போதும் தங்களை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை, என்று குற்றஞ்சாட்டிய தேமுதிகவினர், மரியாதை இல்லாத இடத்தில் எப்படி தேர்தல் பணியாற்றுவது என்று கேள்வி எழுப்பி தினகரனின் பிரச்சார கூட்டத்தை புறக்கணித்தனர்

தொடர்ந்து தங்கள் கட்சி தலைவரை ஆதரித்து கோசமிட்டவாறு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் தினகரனின் பிரச்சாரக் கூட்டம் முடிந்த பின்னர் அழைத்து வந்த தொண்டர்களுக்கு பேசியபடி 200 ரூபாய் பணம் கொடுக்காததால் அவர்களை அழைத்து வந்த பெண் கும்பத்தை கையில் ஏந்தியபடி உரிமைக்குரல் எழுப்பினார்

மாவட்ட செயலாளரிடம் தெரிவித்து பணம் கொடுத்து விடுவதாக கூறி அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச்செய்தனர்

தேர்தல் கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வருவதும், பேசியபடி பணம் கிடைக்கவில்லையென்றால் வீதியில் தவிப்பதும் நம்ம ஊர் வாடகை தொண்டர்களுக்கு வாடிக்கையான நிகழ்வாக மாறிபோய்விட்டது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments