முதலமைச்சர் சூறாவளி பரப்புரை..ஹைட்ரோ கார்பன் திட்டம்.! அனுமதி கிடையாது

0 1941
காவிரி டெல்டா மாவட்டங்களில், ஒருபோதும் ஹைட்ரோ கார்பன் திட்டம் கிடையாது என்றும், அதனை ஒருபோதும் ஆளும் அதிமுக அரசு அனுமதிக்காது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில், ஒருபோதும் ஹைட்ரோ கார்பன் திட்டம் கிடையாது என்றும், அதனை ஒருபோதும் ஆளும் அதிமுக அரசு அனுமதிக்காது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, கந்தர்வக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரசாரத்தின் போது பேசிய அவர், உள்ஒதுக்கீடு மூலம் அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி உள்ளது என்றார். 

ஊர் ஊராக தொண்டை காய பேசும் அளவிற்கு அரசின் சாதனைகள் உள்ள நிலையில், ஆளும் அதிமுக அரசு ஒன்றுமே செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை மேற்கொள்வதாக, முதலமைச்சர் குற்றம்சாட்டினார். 

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு தான் என முதலமைச்சர் குறிப்பிட்டார். 

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் உறுதிபட தெரிவித்தார். டெல்டாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அதிமுக அனுமதிக்காது என்றும் அவர் கூறினார்.

பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளின் தென்னை விவசாயிகளின் நலன் காக்க, கொப்பரைத்தேங்காய் கொள்முதல் மற்றும் தேங்காய் சேகரிப்பு மையங்கள் முழுவீச்சில் அமைக்கப்படும் என்றும், அவர் வாக்குறுதி அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments