அனைத்து தொகுதிகளிலும் வெற்றி... மு.க.ஸ்டாலின் உறுதி..!

0 2048
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், திருவாரூரைத் தொடர்ந்து சேலம் சென்றார். சேலம் விமான நிலையத்தில் அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தன.

இதைத் தொடர்ந்து பிரச்சார வேனில் சென்ற மு.க.ஸ்டாலின் சத்திரம், லாரி மார்க்கெட் பகுதிகளில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். பின்னர் வேனில் இருந்து இறங்கி செவ்வாய்பேட்டை பகுதியில் வீதி வழியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற ஸ்டாலின் சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் வரை ஆதரவு திரட்டினார். 

இதையடுத்து சேலம் அருகே கெஜல்நாயக்கன்பட்டியில் ஏற்காடு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருண் ஆகியோருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திறந்த வாகனத்தில் நின்றவாறு பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் காப்பி எடுத்து அதிமுகவினர் வெளியிட்டுள்ளனர் என்றார். திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை காமெடி வில்லன் என்றும் அவர் கூறினார்.

பின்னர் நாமக்கல்லில் பிரசாரம் செய்த அவர், நாமக்கல் ராமலிங்கம், ராசிபுரம் மதிவேந்தன், சேந்தமங்கலம் பொன்னுசாமி, பரமத்தி வேலூர் மூர்த்தி மற்றும் திருச்செங்கோடு கொமதேக வேட்பாளர் ஈஸ்வரன் ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 43 சதவீத வாக்குகளையும் அதிமுக கூட்டணி 30 சதவீத வாக்குகளையும் பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவிப்பதாக அப்போது அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments