தமிழ்நாட்டில் மேலும் 867 பேருக்கு கொரோனா பாதிப்பு - 561 பேர் டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில், கொரோனா பரவல் சற்று அதிகரிப்பதன் முகமாக, மேலும், 867 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா பரவல் சற்று அதிகரிப்பதன் முகமாக, மேலும், 867 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 561 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னை பெருநகரிலும் கொரோனா பரவல் சற்று அதிகரிக்கும் நிலையில், புதிதாக 352 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 பேருக்கும், திருவள்ளூரில் 55 பேருக்கும், தஞ்சாவூரில் 51 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
18 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு பதிவான நிலையில், தருமபுரி, பெரம்பலூர், இராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக பெருந்தொற்று பாதிப்பில்லை.
Comments