வன்னியர் மக்கள் இட ஒதுக்கீட்டில் பா.ம.க துரோகம்..! ரகசியம் உடைத்த எ.வ வேலு..!
வட மாவட்டங்களில் ஒற்றை சமூகமாக, 18 சதவீதம் வரை இட ஒதுக்கீட்டை அனுபவித்து வந்த வன்னியர் மக்களுக்கு 10. 5 சதவீதமாக சுருக்கிப் பெற்றுக் கொடுத்துவிட்டு அன்புமணி ராமதாஸ் கிளிசரின் கண்ணீர் வடிப்பதாக ஏ.வ. வேலு எம்.எல்.ஏ குற்றஞ்சாட்டியுள்ளார்.
வந்தவாசி தொகுதி திமுக வேட்பாளர் அம்பேத்குமாரின் தேர்தல் பணிமனையை திறந்து வைத்து பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, பாட்டாளி மக்கள் கட்சியை வீரியம் இல்லாத கட்சி என்றும் வந்தவாசி தொகுதியில் 75 ஆயிரம் ஆதிதிராவிடர்கள் இருக்க அவர்களில் ஆள் கிடைக்காமல் அரூரில் இருந்து வெளி ஆளை கொண்டு வந்து பா.ம.க களமிறக்கி இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
அதே போல வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ஆணை கிடைக்கப்பெற்றதும் கிளிசரின் தடவிக் கொண்டு அன்பு மணி கண்ணீர் வடித்ததாகவும், உண்மையிலேயே வட மாவட்டங்களில் 18 சதவீதம் வரை கிடைத்துக் கொண்டிருந்த இட ஒதுக்கீட்டை இந்த புதிய ஒதுக்கீட்டின் மூலம் 10.5 சதவீதமாக சுருக்கி வன்னிய மக்களுக்கு பா.ம.க துரோகம் இழைத்து விட்டதாக எ.வ. வேலு குற்றஞ்சாட்டினார்.
Comments