சென்னையில் போதிய பயணிகள் இல்லாமல் 16 உள்நாட்டு விமானங்கள் ரத்து

0 1880
சென்னையில் போதிய பயணிகள் இல்லாமல் 16 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் போதிய பயணிகள் இல்லாமல் 16 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதியிலிருந்து உள்நாட்டு விமான சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தபட்டதால் நாளொன்றுக்கு 270 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்தன.

பயணிகள் எண்ணிக்கையும் நாளொன்றுக்கு 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை அதிகரித்தது. கடந்த சில நாட்களாக பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக ஒரே நாளில் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு மொத்தம் 220 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments