தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் பயங்கர தீ விபத்து-30 குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம்

தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 30 குடிசை வீடுகள் தீக்கிரையாகின.
தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 30 குடிசை வீடுகள் தீக்கிரையாகின.
சிரேஸ் சத்திரம் சாலை வடக்கு வாசல் புண்ணியமூர்த்தி தோட்டம் பகுதியில் உள்ள முத்தழகு என்பவரது குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது.
தகவலறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 30 குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து தஞ்சை மேற்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments