டெல்லி - நொய்டா சாலைமறியல் போரட்டத்தை அறிவித்த விவசாயிகள்

0 767
டெல்லி - நொய்டா சாலைமறியல் போரட்டத்தை அறிவித்த விவசாயிகள்

டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தும் விவசாயிகள், டெல்லி-நொய்டா சாலையை மறிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதைத் தெரிவித்த பாரதீய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் எப்போது மறியல் போராட்டம் நடக்கும் என்பதை தெரிவிக்கவில்லை.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகள் இந்த மாத துவக்கத்தில் குண்ட்லி-பல்வால் மேற்கு புறவழி விரைவு நெடுஞ்சாலையில் 5 மணி நேரம் போராட்டம் நடத்தி போக்குவரத்தை முடக்கினர்.

இப்போது அவர்கள் அறிவித்துள்ள நொய்டா எல்லை மறியல் போராட்டத்தால் டெல்லியின் இருவழி போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments