மத்திய பிரதேசத்தில் 2 நகரங்களில் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை இரவு நேர ஊரடங்கு

0 2523
குஜராத்தை தொடர்ந்து, மத்திய பிரதேச அரசும் 2 நகரங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

குஜராத்தை தொடர்ந்து, மத்திய பிரதேச அரசும் 2 நகரங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

வரும் 17 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த இரவு நேர ஊரடங்கு நீடிக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

தலைநகர் போபால் மற்றும் இந்தூரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஜபல்பூர், குவாலியர், உஜ்ஜயினி, ரத்லாம், பர்கான்பூர் உள்ளிட்ட 8 நகரங்களில் வணிக மையங்கள் மற்றும் சந்தைகள் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் மாநில அரசு  தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments