திரையரங்கிற்கு மக்களோடு மக்களாக படம் பார்க்க வந்த கிறிஸ்டோபர் நோலன்

0 2040

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், திரையரங்குகளுக்கு மக்கள் வருவதை ஊக்குவிக்கும் வகையில், புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், திரையரங்கு ஒன்றிற்கு படம் பார்க்க வருகை புரிந்தார்.

கொரோனா பேரிடருக்குப் பிறகு முதல்முறையாக லாஸ் ஏஞ்சலஸ் நகரில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் மட்டுமின்றி, அருங்காட்சியகங்களும் 25 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி பரவலாக கிடைக்கத் தொடங்கிய பிறகு, திரையரங்குகளில் பார்வையாளர்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்கும் என கிறிஸ்டோபர் நோலன் ஏற்கெனவே நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரே ஒரு திரையரங்கிற்கு படம் பார்க்க வருகை புரிந்ததார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments