ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆட்டோ பிரச்சாரம்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் ஆட்டோவில் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் ஆட்டோவில் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
உக்கடம் பகுதியில் கமல்ஹாசன், நடந்து சென்று ஆட்டோ ஓட்டுநர் ஒருவரைச் சந்தித்து, தன்னை தாஜ் ஓட்டல் விடுமாறு கேட்டுக்கொண்டார். வழிநெடுக கமல்ஹாசனைப் பார்த்து கையசைத்த வாகன ஓட்டிகளிடம் கவனமாக செல்லுமாறு அவர் அறிவுரை கூறினார்.
பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன், காந்திபுரம் பாஜக அலுவலகத்தில் இருந்து ராமநாதபுரம் பகுதியிலுள்ள தேர்தல் அலுவலகத்துக்கு ஆட்டோவில் வந்தார். அவரை கூட்டணி கட்சியினரும் பெண்களும் உற்சாகமாக வரவேற்றனர்.
Comments