வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மீது காவல் நிலையத்தில் புகார் ?

0 1509
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முளையூர் பகுதியில் நேற்று அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது உதவியாளர் ஒருவர் வாக்காளர்களின் ஆரத்தி தட்டுகளில் பணம் வைப்பது போலவும் நத்தம் விஸ்வநாதனே தனது பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து வாக்காளர்களுக்கு கொடுப்பது போலவும் வீடியோ வெளியானது.

இது தேர்தல் விதிமீறல் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், தேர்தல் பிரிவு வீடியோ கண்காணிப்பு குழு தலைவர் சார்பில் அதிமுகவினர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments