மார்ச் 29ந் தேதிக்குள் தபால் வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் விவரங்களை சமர்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1630
மார்ச் 29ந் தேதிக்குள் தபால் வாக்களிக்க தகுதி பெற்றவர்களின் விவரங்களை சமர்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

பால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை மார்ச் 29ம் தேதி மாலை 6 மணிக்குள், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும் என தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது.

அத்தகைய வாக்காளர்களின் தொகுதி வாரியான பட்டியலை வழங்கக் கோரிய வழக்கில், இந்த பட்டியல் மார்ச் 29ம் தேதி,வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்று பட்டியலை மார்ச் 29ம் தேதி மாலை 6 மணிக்குள் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments