' சீட் தராதது வருத்தம்தான், ஆனாலும் அ.தி.மு.க என் உயிர்!'- எம்.ஜி.ஆர் பேரன் சொல்கிறார்

0 7681
எம்.ஜி.ஆர் பேரன் ராமச்சந்திரன் ரவி

தாத்தா உருவாக்கிய கட்சியை தவிர வேறு எந்த கட்சிக்காகவும் உழைக்கப் போவதில்லை என்று எம்.ஜி.ஆர் பேரன் ராமச்சந்திரன் ரவி கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமாரின் மகன் ராமசந்திரன் ரவி இன்று தேனிக்கு சென்றார். அங்கு அ.தி.மு.க நிர்வாகிகள் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடத்தில் அவர் கூறியதாவது,

''சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிபட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தேன். ஆனால் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை, அதுகுறித்து எந்த வருத்தமும் இல்லை . கட்சியில் சீனியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் வெற்றிதான் முக்கியம்.கட்சி சரியாகத்தான் முடிவு எடுத்திருக்கும் . துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் முதலமைச்சர் ஈபிஎஸ் ஆகியோர் கட்சியை இந்த அளவு சிறப்பாக பிளவுபடாமல் கொண்டுவந்ததே பெரிய சாதனைதான்.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற இரண்டு மாதங்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும், நான்கு மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று கூறி வந்த நிலையிலும் அவர் சிறப்பாகவே கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்தியுள்ளார். கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது எனக்கும், என் அபிமானிகளுக்கும் வருத்தம்தான். இருந்த போதும் கட்சியின் முடிவே இறுதியானது.என்னை நடிகர் கமல் உட்பட பல்வேறு கட்சியினர் தங்களது கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்தார்கள்.இருந்தபோதும் அதிமுக கட்சியின் சின்னமும் கொடியும் எங்கு உள்ளதோ அங்கு தான் நான் இறுதி வரை இருப்பேன்.முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கட்சியில் பதவி தருவதாக வாக்குறுதி அளித்து உள்ளார்கள். அவர்கள் உறுதியாக தருவார்கள் என்று நம்புகிறேன்.

கட்சியின் சார்பாக தேர்தல் பிரச்சாரம் செய்ய அழைத்தாலும், அல்லது வேறு எந்த பணிக்கு அழைத்தாலும் நான் உடனடியாக ஓடிச் சென்று கட்சிப்பணி செய்ய தயாராக உள்ளேன்.இது என் தாத்தாவின் கட்சி. இந்த கட்சிக்காக மட்டும்தான் பணியாற்றுவேனே தவிர வேறு எந்த கட்சிக்கும் பணியாற்ற மாட்டேன்.சசிகலா அரசியலை விட்டு சென்றது அவரது சொந்த விருப்பம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சொந்த விருப்பம் இருக்கும். அதில் யாரும் தலையிட முடியாது.வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான மக்கள் நலத்திட்டங்களை தந்து கொண்டுள்ளார். மக்கள் நலத்திட்டங்களையும் செய்து முடித்து விட்டு தேர்தலை சந்திக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான்'' என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments