"ரயில்வே துறையில் தனியார் முதலீட்டை வரவேற்க வேண்டும்" -அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு

0 1555
"ரயில்வே துறையில் தனியார் முதலீட்டை வரவேற்க வேண்டும்" -அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு

யில்வே துறையில் தனியார் முதலீட்டை வரவேற்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ரயில்வே தனியார்மயம் ஆக்கப்படுவதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, மக்களவையில் பதிலளித்துப் பேசிய அவர், பொருளாதார வளர்ச்சிக்கு அரசு மற்றும் தனியார் வாகனங்களின் பங்களிப்பு தேவை என்றார்.

ரயில்வே துறையில் தனியார் முதலீடு செய்வதன் மூலம் சேவைகள் மேம்படும் என்பதால், அதனை வரவேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஊரடங்கின் போது ரயில்சேவையை ரத்து செய்யாமல் இருந்திருந்தால், கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவியிருக்கும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments