கொரோனா பரவல் அதிகரிப்பதால் ரயில்களை 100 சதவீதம் இயக்க உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

0 2779
கொரோனா பரவல் அதிகரிப்பதால் ரயில்களை 100% இயக்க உத்தரவிட முடியாது

கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்குமாறு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கொரோனா ஊடரங்கால் கடந்த மார்ச் முதல் ரத்து செய்யப்பட்ட ரயில் போக்குவரத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 65 சதவிகிதம் அளவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் 100 சதவிகிதம் இயக்க உத்தரவிடவேண்டும் என பொதுநல வழக்கு தாக்கலானது.

இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தனிமனித விலகல் உள்ளிட்ட விதிகளை  புறநகர் ரயில்களில் அவற்றை பின்பற்ற இயலாது என்பதுடன், கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியாது என தெரிவித்தது.

தடுப்பூசி போடும் பணிகள் முழுமையடைந்த பிறகோ அல்லது தொற்று பரவல் குறைந்தாலோ மனுதாரர் இதே கோரிக்கையை எழுப்பலாம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments