வாக்கு அட்டையை வைத்து ஏ.டி.எம்மில் பணம் எடுக்க முயற்சி... மது பிரியரால் 30 நிமிடங்கள் மக்கள் அலைக்கழிப்பு

0 3914
வாக்காளர் அடையாள அட்டையை வைத்து பணம் எடுக்க முயன்றவர்

உசிலம்பட்டியில் மதுபோதையில் ஏடிஎம் இயந்திரத்தில் வாக்காளார் அடையாள அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற முதியவரால் வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டன.ர

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையம் செயல்பட்டுவருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் எப்போதும் நீண்ட கியூ இருக்கும்.இந்ந நிலையில் முதியவர் ஒருவர் மதுபோதையில் தள்ளாடிகொண்டே ஏடிஎம் மையத்திற்குள் புகுந்தார். உள்ளே போனவர் போனவர்தான் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், வெளியே காத்திருந்தவர்கள் சலித்து கொண்டார்கள்.

ஒருகட்டத்தில் சிலர் ஏ .டி.எம் மையத்துக்குள் சென்று பார்த்தனர். அப்போது, ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி அந்த முதியவர் பணத்தை எடுக்க முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பிறகு, இதை வைத்து எடுத்தால் எப்படி பணம் வரும் என்றும் அவரிடத்தில் அங்கிருந்தவர்கள் கூறினார். ஆனால், மது போதையில் இருந்த அந்த முதியவர் , அதெல்லாம் இல்லை இதை வைத்துதாதன் இத்தனை காலம் நான் பணம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னவாரே மீண்டும் மீண்டும் தன் வாக்காளர் அட்டையை வைத்து பணம் எடுக்க முயன்றார்.

சுமார் ,30 நிமிடங்கள் மற்றவர்களுக்கு வழி விடாமல் அவர் ஒருவரே பணத்தை எடுக்க முயல கியூவில் இருந்தவர்கள் நொந்து போனார்கள். ஆனால், என்ன முயன்றும் பணம் வராத காரணத்தினால், ஏ.டி.எம் இயந்திரம் ரிப்பேராகி விட்டது என்று அங்கிருந்தவர்களிடத்தில் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தார். இந்த காட்சியை அங்கிருந்த இளைஞர் வீடியோவாக இணையத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments