மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காததால் பாஜகவுக்கு எந்த இழப்பும் ஏற்படாது -அமைச்சர் ராஜ்நாத்சிங்

0 747
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காததால் பாஜகவுக்கு எந்த இழப்பும் ஏற்படாது? -அமைச்சர் ராஜ்நாத்சிங்

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காததால், பாஜகவுக்கு எந்த இழப்பும் ஏற்படாது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக கொல்கத்தா செல்லும் வழியில், விமானத்தில் ஏஎன்ஐ செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ராஜ்நாத்சிங் இவ்வாறு பதிலளித்தார். பாஜக ஜனநாயக கட்சி என்று குறிப்பிட்ட அவர், தேர்தலில் வெற்றி பெறும் தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் கூடி மாநில முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என்று கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஏற்பட்ட காயத்திற்கு, பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றம்சாட்டுகிறார் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments