ரூ.35 லட்சம் மோசடி: வழக்கு விசாரணைக்கு டிமிக்கி ; நீதிபதியால் காங்கிரஸ் கட்சி பிரமுகர் கைது !

0 2381
கே.எஸ் அழகிரிக்கு வேல் வழங்கும் ரஞ்ச்ன்குமார்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரியின் தீவிர ஆதரவாளரும், கட்சி நிர்வாகியுமான ரஞ்சன் குமாரை பண மோசடி வழக்கில் அமைந்தகரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருப்பவர் ரஞ்சன்குமார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.எஸ்.அழகிரியின் தீவிர ஆதரவாளர். கடந்த 2013-ம் ஆண்டு சென்று சையது சமியுல்லா என்பவரிடம் ரூ. 35 லட்சம் பணம் பெற்று விட்டு ரஞ்சன்குமார் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கொடுக்க ரஞ்சன் குமார் செக் கொடுத்துள்ளார்.  செக்கும் பணமில்லாமல் திரும்பி விட்டது. இதனால், சமியுல்லா ரஞ்சன் குமார் மீது புகார் கொடுத்தார். காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து, சமியுல்லா சென்னை எழும்பூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது ரஞ்சன்குமார் ஆஜராகாமல் நீதிமன்றத்தை அவமதித்து வந்தார். கடந்த 10-ஆம் தேதி  வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரஞ்சன்குமார் ஆஜராகவில்லை.இதனால், அதிருப்தியடைந்த விரைவு நீதிமன்ற நீதிபதி ரஞ்சன்குமாரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன், அதற்கான பிடியாணையையும் பிறப்பித்தார்.

இதனால், அமைந்தகரை போலீசார் ரஞ்சன்குமாரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்றிரவு பூந்தமல்லி அருகே பதுங்கியிருந்த ரஞ்சன்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ரஞ்சன் குமார் ஆஜர்படுப்படவுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments