அனுமதியின்றி வைக்கப்பட்ட தேவர் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மோதல்: போலீசார், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயம்

0 21515
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தேவர் சிலை அகற்றம்போது போலீசார் மீதும் அவர்களது வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தேவர் சிலை அகற்றம்போது போலீசார் மீதும் அவர்களது வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளாளப்பட்டி புதூரில் அமைக்கப்பட்ட 5 அடி உயர புதிய தேவர் சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டதாகக் கூறி போலீசார் அதனை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது கிராம மக்களில் சிலர் தாக்கியதில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக 11 பெண்கள் உட்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பதற்றத்தைத் தணிக்க, கிராமம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments