கோவையில் நடைபயிற்சி மேற்கொண்டவாறு வாக்கு சேகரித்தார் கமல்ஹாசன்

கோவையில் நடைபயிற்சி மேற்கொண்டவாறு வாக்கு சேகரித்தார் கமல்ஹாசன்
கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நடைபயிற்சி மேற்கொண்டவாறு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.
இன்று காலை அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், சாண்டோ சின்னப்ப தேவர் நினைவு தேகப்பயிற்சி சாலையில் உடற்பயிற்சி செய்தார்.
பின்னர் சாலையோரம் நடந்தவாறு அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்த கமல்ஹாசன், உக்கடம் மீன் சந்தையில் வியாபாரிகளுடன் கலந்துரையாடினார்.
Comments