இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் பதிலளிக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு வார கால அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

0 1000
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் பதிலளிக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு வார கால அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பான வழக்கில் பதிலளிக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு வார கால அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், கடந்த 2018-ஆம் ஆண்டு ‘சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கான சட்டம் 2018 என்ற சட்டத்தை மாநில அரசு இயற்றியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு ,  பல்வேறு மாநிலங்கள் சார்பில்  ஆஜரான வழக்கறிஞர்கள்  கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் எழுத்துப்பூர்வமான பதிலை சமர்ப்பிக்க ஒரு வார கால அவகாசம் அளிக்கப்படுவதாக தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments