ஓடும் காரிலிருந்து வெளியேறி அதன் மீது தண்டால் எடுத்த இளைஞர்: வீடியோ வைரலானதால் சிக்கிய சம்பவம்

0 2615

உத்தரப்பிரதேசத்தில் காரை ஓடவிட்டு அதன் மீது தண்டால் எடுத்த இளைஞருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

அம்மாநிலத்தில், இளைஞர் ஒருவர் தானே இயக்கிய மகேந்திரா ஸ்கார்பியோ காரிலிருந்து வெளியேறி பின்னர் காரின் மேல்பகுதிக்குச் சென்று தண்டால் எடுத்தார்.

இளைஞரின் இந்த சேட்டை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து, பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த இளைஞரைப் பிடித்த காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்தனர். மேலும் தான் செய்தது தவறு என்று அந்த இளைஞர் கூறுவதையும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments