அதிர்ச்சி கொடுத்த அஸ்ட்ராஜெனகா..!

0 3061
அதிர்ச்சி கொடுத்த அஸ்ட்ராஜெனகா..!

க்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் சிலருக்கு ரத்தம் உறைந்து போனதாக கூறப்பட்ட நிலையில், ரத்தம் உறைதலுக்கும் தங்களின் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராஜெனகா ஊசி போட்டுக் கொண்ட டென்மார்க்கைச் சேர்ந்த ஒருவர் வெய்ன் த்ராம்போசிஸ் எனப்படும் நரம்பில் ரத்தம் உறைந்து உயிரிழந்ததைத் தொடர்ந்து நார்வே, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ராஜெனகா ஊசி போடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன.

இந்நிலையில் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், தெளிவான அரசியல் சான்றுகளின் அடிப்படையில் தங்களது மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மக்களின் பாதுகாப்பே முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ள அஸ்ட்ராஜெனகா, அதனைக் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களது தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட 17 மில்லியன் மக்களின் தரவுகளை கவனமாக பரிசீலித்து வருவதாகவும், அவர்களின் வயது, பாலினம் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதையும் ஆராய்ந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 15 பேருக்கு நரம்பில் ரத்தம் உறைதல் காணப்பட்டதாகவும், 22 பேருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், எதிர்பார்த்த நிகழ்வை விட இது மிகவும் குறைவு என்றும் கூறியுள்ளது. மேலும் ஏனைய தடுப்பூசிகளிலும் இதுபோன்ற சிக்கல் காணப்படுவதாகவும் அஸ்ட்ராஜெனகா கூறியுள்ளது.

இந்நிலையில் அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசி பாதுகாப்பானது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments