உலக அளவில் அதிகம் ஆயுதம் இறக்குமதி செய்யும் 2 வது நாடாக இந்தியா நீடிப்பு

0 1809
உலக அளவில் அதிகம் ஆயுதம் இறக்குமதி செய்யும் 2 வது நாடாக இந்தியா நீடிப்பு

டந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 33 விழுக்காடு குறைந்திருந்தாலும் உலகிலேயே அதிக ஆயுதம் இறக்குமதி செய்யும் 2வது நாடு என்ற பெயரைப் பெற்றுள்ளது.

இது குறித்து ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், உலகிலேயே அதிக ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் சவுதி அரேபியா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

2ம் இடத்தில் உள்ள இந்தியா 2016 முதல் 2020 வரை அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் அச்சுறுத்தல் நீடிப்பதால் இந்தியா சுயமாகவே ஆயுதங்களைத் தயாரிப்பதில் முனைப்பு காட்டி வருவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments