மார்ச் 31 முதல் சிறப்பு ரயில்கள் ரத்து என்பது தவறான செய்தி- ரயில்வே அமைச்சகம் விளக்கம்

0 1323
மார்ச் 31 முதல் சிறப்பு ரயில்கள் ரத்து என்பது தவறான செய்தி- ரயில்வே அமைச்சகம் விளக்கம்

மார்ச் 31 முதல் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படும் என்ற தகவல் உண்மைக்கு மாறானது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது எனத் தெரிவித்துள்ளது.

ரயில்கள் ரத்து என எந்த செய்தியையும் தாங்கள் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுள்ள ரயில்வே அமைச்சகம், கடந்த ஆண்டு செய்தி தற்போது பரப்பப்படுவதாகக் கூறியுள்ளது.

மேலும், எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் தற்போது சிறப்பு ரயில்களாக தொடர்ந்து இயங்கும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments