பெட்ரோல்,டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது- அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்

0 1213
பெட்ரோல்,டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது- அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்

பெட்ரோல்,டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றும், அதுபோல மாநில அரசுகளும் வரியை குறைக்க முன்வர வேண்டும் என மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், இரு தரப்பும் இணைந்து செயல்பட்டால் தான் மக்கள் உரிய பலனை பெற முடியும் என்றார்.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றை 'ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வர மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் இதை மாநிலங்கள் ஆதரிக்க முன்வரவில்லை என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments