"2 ஆண்டுகளாக ரூ. 2,000 நோட்டுகள் அச்சடிக்கவில்லை" -அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்
"2 ஆண்டுகளாக ரூ. 2,000 நோட்டுகள் அச்சடிக்கவில்லை" -இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்
கடந்த 2 ஆண்டுகளாக 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கவில்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இது தொடர்பாக ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அனுராக் தாக்கூர் பதிலளித்தார். 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் மிகக் குறைவாக இருப்பதாகவும், வங்கிகளிலும் ஏடிஎம்களில் அவை கிடைக்கவில்லை என்று கணேசமூர்த்தி கேட்டார்.
இதற்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த அவர், 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 2019-20 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சகத்திற்கு அனுப்பவில்லை என்றார்.
Comments