இவங்க அக்கபோர் தாங்கலையே..! மஞ்சள் மகிமை

0 3656
இவங்க அக்கபோர் தாங்கலையே..! மஞ்சள் மகிமை

மைச்சர் ராஜேந்திரபாலாஜியைத் தோற்கடிக்க தனக்கு வாக்களிக்கும்படி சாத்தூர் அமமுக வேட்பாளர் பிரசாரம் செய்யும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் மோதியதால் அதிமுகவில் சீட் கிடைக்காமல் அ.ம.மு.கவில் சேர்ந்து சாத்தூர் தொகுதி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன்..!

அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக மேற்கொண்ட பிரச்சாரத்தில் ராஜேந்திரபாலாஜியைத் தோற்கடித்து தன்னை வெற்றிபெற வைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

காவலர் அணிவகுப்பு போல பலத்த பாதுகாப்புடன், தொண்டர் படை பரிவாரங்களுடன் வேட்புமனு தாக்கலுக்கு புறப்பட்டார் ராஜபாளையம் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி..!

2006 சட்ட மன்ற தேர்தலில் திமுக 2 ஏக்கர் நிலம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும், வெற்றி பெற்ற பின்னர் அதனை நிறைவேற்றவில்லை என்று குற்றஞ்சாட்டிய ராஜேந்திரபாலாஜி, திமுக தலைவர் முகஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்..!

வேட்புமனுதாக்கல் செய்யும் இடத்திற்கு விதியைமீறி அவரையும் சேர்த்து 7 பேராக சென்ற ராஜேந்திர பாலாஜியை எந்த ஒரு போலீஸ் அதிகாரியும் தடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments